பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 கிராண்ட் ஃபைனலை நோக்கி நகர்ந்து வருகின்றது. இந்த சீசனில் தற்போது முத்து குமரன், சௌந்தர்யா, பவித்ரா, அருண், விஷால், ராணவ், ராஜன், மஞ்சரி, மற்றும் தீபக் ஆகிய பத்து போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளார்கள்.
இந்த வாரம் முழுவதும் டிக்கெட் டு பினாலைக்கான டாஸ்க் வைக்கப்பட்டது. அதில் நடைபெற்ற 10 டாஸ்க்களின் முடிவில் அதிக புள்ளிகளை பெற்ற போட்டியாளர் பைனலுக்கு நுழைவார் என்று அறிவிக்கப்பட்டது.
குறித்த டாஸ்க்கில் ராஜன் தான் 16 புள்ளிகளைப் பெற்று முதலாவதாக பைனலுக்குள் நுழைந்தார். இரண்டாவது இடத்தில் முத்துக்குமரன் காணப்பட்டார்.
d_i_a
இன்றைய தினம் நடைபெறும் வீக்கென்ட் எபிசோட்டில் இதனை விஜய் சேதுபதி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இன்றைய தினம் எலிமினேஷன் நடைபெற உள்ள நிலையில் இறுதியாக டேஞ்சர் சோனில் மஞ்சரி, தீபக், பவித்ரா மற்றும் அருண் ஆகியோர் காணப்படுகின்றார்கள்.
இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் எட்டில் இருந்து மஞ்சரி எலிமினேட் ஆகியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் இன்னும் அதிகார்வ பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ஏற்கனவே மஞ்சரி குறைவான வாக்குகளை பெற்று இறுதி நிலையில் காணப்பட்டார். இவருக்கு அடுத்த நிலையிலே பவித்ராவும் அருணும் உள்ளனர்.
எனவே இந்த வாரம் டபிள் எவிக்சன் நடைபெற்றால் அதில் மஞ்சரியுடன் பவித்ரா அல்லது அருண் வெளியேறுவார்கள் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!