• Oct 04 2024

விஜய் டிவி புகழனான மாகாபா ஆனந்திற்கு நெருங்கியவர் மரணம்! இன்ஸ்டா வீடியோ இதோ...

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளர் தான் மாகாபா ஆனந்த். இவர் சூப்பர் சிங்கர், அது இது எது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் தனது பயணத்தை ஆரம்பித்தார்.

அதன்பின் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் அவை யாவும் இவருக்கு பெரிதளவில் கை கொடுக்கவில்லை. இதனால் மீண்டும் சின்னத்திரையிலேயே தனது கவனத்தை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து சூசன் ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு தற்போது ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளார்கள்.


கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் டிவியில்   பணிபுரிந்து வரும் இவர், தற்போது மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார்.

இந்த நிலையில், தனக்கு அண்ணன் ஸ்தானத்தில் இருக்கும் ஒருவர் மரணம் அடைந்து விட்டார் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோகத்துடன் பதிவிட்டுள்ளார் மாகாபா ஆனந்த். தற்போது அவருடைய பதிவிற்கு பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement