• Jan 18 2025

இயக்குனர் சங்கரின் குடும்பத்திலிருந்து அடுத்த சினிமா என்ட்ரி ! வரவேற்பார்களா தமிழ் ரசிகர்கள் ?

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தனது உழைப்பால் தனக்கான ஓர் அங்கீகாரத்தை பெற்றுள்ளார்.பிரம்மாண்டத்துடனான சமூக அரசியல் பிரச்சனைகளை திரையில் கொண்டுவரும் முக்கிய இயக்குனராக அறியப்படும் இவரின் தற்போதைய படங்கள் சற்று சறுக்கலை சந்தித்திருக்கின்றன.

இயக்குனர் ஷங்கர் மகன் ஹீரோவாக நடிக்க வருகிறாரா? ஷங்கர் சொன்ன பதில் - Lanka  Times

இவரின் குடும்பத்திலிருந்து அடுத்து தமிழ் திரையுலகில் காலடி வைத்தார் இவரது மகளும் மருத்துவ பட்டதாரியுமான அதிதி சங்கர்."விருமன்" திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அறிமுகமான அதிதி தொடர்ந்தும்  நடிப்பு மற்றும் பின்னணி பாடல்கள் என பணியாற்றி வருகிறார்.

article_image3

அண்மையில் நடந்த "இந்தியன் 2" திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் அதிதி சங்கர் கொடுத்திருந்த ஸ்டேஜ் பேர்போர்மன்ஸ்  சமூக வலைத்தளங்களில் பல கேளிக்கைகளுக்கு உள்ளாகியிருந்தது.இந்நிலையில் சங்கர் தற்போது கூறியிருக்கும் தகவல் தமிழ் ரசிகர்களுக்கு பெரிய கேள்வியாகவே மாறிப்போயிருக்கிறது.

article_image5

அண்மையில் ஊடகம் ஒன்றில் பேசிய சங்கர் அவரது மகன் அர்ஜித் பற்றி தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது "என் மகனை முழுவதுமாக சினிமாவுக்கு கொடுத்து விட்டேன். இனிமேல் அவன் நடிகன் ஆவதும், இயக்குனர் ஆவதும் தமிழ் மக்கள் கையில் தான் உள்ளது." என பதிலளித்திருந்தார்.

இயக்குனர் ஷங்கர் மகன் ஹீரோவாக நடிக்க வருகிறாரா? ஷங்கர் சொன்ன பதில் - Lanka  Times

இச் செய்தியை கேட்ட நெட்டிசன்கள் 'திறமை இருந்தால் யாராகவிருப்பினும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள், அரசியல் பிரச்சாரம் போல் சங்கர் பேசுவது  வேடிக்கையாக உள்ளது' என சமூக ஊடகங்களில் பதிவு மற்றும் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement