• Dec 29 2025

அடேங்கப்பா.! அசத்தலான குரலில் பாடிய விஜய்.! வெளியானது "ஜனநாயகன்" 3வது பாடல் அப்டேட்

subiththira / 4 days ago

Advertisement

Listen News!

ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் விஜய்யின் புதிய படமான ‘ஜனநாயகன்’ ஹரிஷ் வினோத் இயக்கத்தில் உருவாகியதுடன் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் பணியாற்றியுள்ளார். 


இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் போன்ற பல தலைசிறந்த நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

‘ஜனநாயகன்’ படத்தை 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். 


இந்நிலையில், இப்படத்தின் 3வது பாடலான ‘செல்ல மகளே’ நாளை வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் இந்தப் பாடலை தளபதி விஜய் நேரடியாக பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement