• Dec 29 2025

லோகேஷின் நீண்ட நாள் கனவு திட்டத்திற்கு கை கொடுத்த அல்லு அர்ஜுன்.! தரமான சம்பவம் இருக்கு...

subiththira / 4 days ago

Advertisement

Listen News!

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பது  தற்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பரவிய வதந்திகளின் பின்னர், நேற்று லோகேஷ் கனகராஜ் நேரடியாக அல்லு அர்ஜுனை சந்தித்து பேசியதன் மூலம் இதனை அதிகாரபூர்வமாக உறுதி செய்தார்.


இந்த புதிய படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு தொடங்கும் என கூறப்படுகிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இதுவரை தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவரது கதைகளில் தனித்துவமான எளிமை மற்றும் ஸ்டைலிஷான தரத்தை ரசிகர்கள் பெரிதும் விரும்புகின்றனர். 


இந்தப் படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் சூர்யாவுக்கு முன்பாகச் சொன்ன ‘இரும்புக் கை மாயாவி’ கதை எனவும் கூறப்படுகிறது. இது தற்போது அல்லு அர்ஜுனின் கதாபாத்திரத்தில் மாற்றப்பட்டு உருவாக்கப்படவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

Advertisement

Advertisement