• Jan 18 2025

டைட்டிலே மொக்கையா இருக்குதே.. விஜய்சேதுபதி 51வது படம் குறித்து ரசிகர்கள் அதிருப்தி..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் சேதுபதி நடித்து வரும் 51 வது படத்தின் டைட்டில் இன்று மாலை ஆறு முப்பது மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் டைட்டில் உடன் கூடிய வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்திற்கு ‘ஏஸ்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 

சீட்டுக்கட்டு விளையாட்டில் உள்ள ஒரு அட்டையை குறிக்கும் வகையில் உள்ள இந்த டைட்டில் ரொம்ப சுமாராக இருப்பதாக சிலரும், மொக்கையாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த டைட்டிலை உடனே புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு இல்லை என்றும் வேறு நல்ல டைட்டில் வைத்திருக்கலாம் என்றும் விஜய் சேதுபதி ரசிகர்களை கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த டைட்டில் வீடியோவில் முழுக்க முழுக்க அனிமேஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளன என்பதும் ஒரு சில காட்சிகள் சுமாராக இருந்தாலும் இந்த வீடியோ பல காட்சிகள் மொக்கையாக இருப்பதாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் விஜய் சேதுபதி ஒரு நல்ல திறமையான நடிகர் என்றாலும் அவர் ஹீரோவாக நடித்த திரைப்படங்கள் வரிசையாக தோல்வி அடைந்து வருகின்றன என்றும் அதனால் அவர் மீண்டும் வில்லனாகவே நடிக்கலாம் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சமீபத்தில் அவர் ஹீரோவாக நடித்த ’மும்பை கார்’ ’யாதும் ஊரே யாவரும் கேளீர்’ ’மைக்கேல்’ ’டிஎஸ்பி’ ’மாமனிதன்’ ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ உள்பட பல படங்கள் தோல்வி அடைந்துள்ள நிலையில் அவர் வில்லனாக நடித்த ’விக்ரம்’ ’ஜவான்’ போன்ற படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. எனவே தொடர்ந்து அவர் வில்லனாக நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.




Advertisement

Advertisement