இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’கூலி’ படத்தை இயக்கப் போகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது என்பதையும் பார்த்தோம். ரஜினிகாந்த் தற்போது அபுதாபிக்கு ஓய்வெடுக்க சென்று இருக்கும் நிலையில் அவர் சென்னை திரும்பியவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லோகேஷ் கனகராஜ் ’எல்சியு’ என்ற குறும்படத்தை இயக்கப் போவதாகவும் இந்த குறும்படத்தில் அவர் ஏற்கனவே இயக்கிய படங்களின் கேரக்டர்களை உருவாக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
அந்த வகையில் ’விக்ரம்’ படத்தில் கமல் - சூர்யா, ’லியோ’ படத்தில் விஜய், ’கைதி’ படத்தில் கார்த்தி ஆகியோர்களின் காட்சிகளை இணைத்து ஒரு குறும்படம் வெளியிடப் போவதாகவும் இந்த குறும்படத்திற்கு அவர் ’பிள்ளையார் சுழி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி இந்த குறும்படத்தில் அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நரேன் ஆகியவர்களும் இடம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
15 முதல் 20 நாட்களில் இந்த குறும்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்திருப்பதாகவும் இந்த குறும்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் திங்கட்கிழமை நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்ட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
முதன்முதலாக தமிழ் திரை உலகில் ஒரு வித்தியாசமான முயற்சியை லோகேஷ் கனகராஜ் எடுத்திருக்கும் நிலையில் அந்த முயற்சி எந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!