இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில் நடிகர் விமல், யோகி பாபு, ஜான் விஜய், ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டோர்களின் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் தான் மகா சேனா. இந்தத் திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் 12ஆம் தேதி பான் இந்திய வெளியீடாக வெளியாகும்.
இந்த படம் யானை மற்றும் யானை பாகனின் வாழ்வியலையும், பொழுதுபோக்கு அம்சங்களையும் எடுத்துரைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை மருதம் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்திற்காக நடிகர் விமல் நிஜ யானையுடன் பழகி பயிற்சி எடுத்து நடித்துள்ளார். இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், மகா சேனா படக் குழுவினர் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் நாங்கள் முருகன் கோவிலுக்கு வந்திருக்கின்றோம். இன்னும் மூன்று நாட்களில் படம் ரிலீஸ் ஆக உள்ளது. அதற்காக ஆசீர்வாதம் வாங்க வந்துள்ளோம்.
இந்த படம் கண்டிப்பா இந்த ஆண்டில் சிறந்த படமாக அமையும். காந்தாரா, கும்கி படங்களைப் போலவே இந்த படமும் அவையெல்லாம் சேர்ந்தவை ஆக காணப்படும். அதற்கான ஆடியன்ஸ்கள் இந்த படத்தை விரும்பி பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
இந்த படத்தில் யானை ஒன்று இருக்கின்றது. அந்த யானையின் பெயர் விஜய். மக்களுக்கு ரொம்ப நாளைக்கு பிறகு பார்க்கிற நல்ல ஒரு ஃபேமிலி படமாக இந்த படம் அமையும் என தெரிவித்துள்ளனர்.
Listen News!