தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டர்களை நடித்து வந்து அதற்குப் பின்பு நாயகனாக, வில்லனாக தனக்கு கிடைக்கும் கேரக்டர்களில் மிரட்டி வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த நிலையில், ஜியோ ஹாட்ஸ்டார் நடத்திய பிரம்மாண்டமான சவுத் அன்பவுண்ட் நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற போது அதில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது காக்கா முட்டை, காதலும் கடந்து போகும், கடைசி விவசாயி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் மணிகண்டனின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரியசான காட்டான் வெப் சீரிஸ் இன் அறிவிப்பு வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் பல்வேறு படைப்புகள் குறித்த அறிவிப்பையும் ஜியோ ஹாட்ஸ்டார் நேற்றைய நிகழ்ச்சியில் வெளியிட்டது. இந்த அறிவிப்புகள் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. ஆனால் அவற்றின் ரிலீஸ் தேதிகள் வெளியிடப்படவில்லை.
இந்த படம் பற்றி விஜய் சேதுபதி கூறுகையில், மணிகண்டனின் ரைட்டிங் உண்மையிலேயே பிரமாண்டமாக இருந்தது. நான் இந்த படத்தை ரொம்ப என்ஜாய் பண்ணினேன். இந்த படம் மனிதர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு ஒரு தத்துவத்தை கூறும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இதேவேளை, இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் விஜய் சேதுபதி அவதாரம் எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!