விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலை இல்லத்தரசிகள் மட்டும் இல்லாமல் அனைத்து தலைமுறையினரும் விரும்பி பார்த்து வருகின்றனர்.
ஒரு கூட்டு குடும்பத்தில் நடைபெறுகின்ற நிகழ்வுகளை மையப்படுத்தி நகைச்சுவையாகவும் விறுவிறுப்பாகவும் இந்த சீரியல் ஒரு ஒளிபரப்பாகி வருகின்றது.
விகடன் நிறுவனம் தயாரிக்கும் இந்த சீரியலை எஸ். குமரன் இயக்கி வருகின்றார். இந்த சீரியலில் வெற்றி வசந்த். கோமதி பிரியா. நடிகர் சுந்தர்ராஜன். அனிலா ஸ்ரீகுமார், ஸ்ரீதேவா, சல்மா அருண் உள்ளிட்டோர் பிரதான கேரக்டர்களில் நடிக்கின்றார்கள்.

அதில் மனோஜ் என்ற முக்கிய கேரக்டரில் நடிப்பவர் தான் நடிகர் ஸ்ரீதேவா. இவருடைய கேரக்டர் காமெடியாக காணப்படும் அதே நேரத்தில், அப்பாவித்தனமாகவும் காணப்படுகிறது. இவர் எல்லாராலும் ஏமாற்றப்படும் ஒரு நபராகவும் காணப்படுகின்றார்.
இந்த நிலையில், நடிகர் ஸ்ரீதேவா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகின்றது. அதாவது அதில் தனது வீட்டு வாசலுக்கு அருகே போலீஸ் வண்டி இருக்கின்றது. அது ஏன் என்று கேட்போம் என்று லைவில் வீடியோவை பிடித்துக் கொண்டு செல்லுகின்றார் .
இதன்போது போலீசார் இது என்னுடைய ஏரியா என்று மனோஜிடம் வாக்குவாதம் செய்ய, இறுதியில் அவரை போலீஸ் ஜீப்பில் ஏற்றி செல்கின்றனர். எனினும் இது உண்மையா அல்லது ஷூட்டிங்கிற்காக எடுக்கப்பட்ட வீடியோவா என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்,
Listen News!