• Jan 19 2025

விஜய் அண்ணா சீனியர், நான் சின்ன பையன்.. ஆனா எனக்கு கண்டிப்பா லவ் மேரேஜ் தான்..!! சீக்ரெட் சொன்ன மாஸ் ஹீரோ

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய் . இவர் சமீபத்தில் "நான் சினிமாவை விட்டு விலகி முழுநேர அரசியலில் ஈடுபடப்போகிறேன்" என்று அறிக்கை வெளியிட்டது மட்டும் இன்றி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியையும் ஆரம்பித்து உறுப்பினர்களையும் சேர்க்க ஆரம்பித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் இருந்து அனைத்து ஊடகங்களும் சினிமா பிரபலங்கள் அனைவரிடமும் விஜயின் அரசியல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்வியை கேட்டு வருகின்றனர். அவ்வாறே தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தேவர்கொண்டாவையும் கேட்டுள்ளனர்.


விஜய் தேவரகொண்டா மற்றும் முர்னல் தாகூர் நடிப்பில் தயாராகி வெளியாக இருக்கும் "பேமிலி ஸ்டார்" திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக ஊடக சந்திப்பொன்றை ஏற்றப்படுத்தி இருந்தனர். 


அங்கு விஜயின் அரசியல் வருகை பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்ட  போது "எனக்கு சின்ன வயசு அரசியலுக்கு வர விருப்பம் இல்லை ஆனால் நடிகர் விஜய் சீனியர் அவர் தாராளமாக அரசியலுக்கு வரலாம் " என கூறியுள்ளார். 

மேலும், அவரது திருமணம் பற்றி கேட்கப்பட்டதற்கு எனக்கு விரைவில் திருமணம் நடக்கும் கண்டிப்பாக லவ் மேரேஜ் தான் , பெற்றோர்கள் சம்மதத்துடன் நடக்கும் என்றும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement