• Jan 18 2025

'தலைவர் 171' வது படத்தில் ரஜினிக்கு இப்படியொரு கேரக்டரா? இதை ஏற்கனவே சூர்யா பண்ணிட்டாரே..!!

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

'ஜெயிலர்' படத்தினுடைய பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம்  ரஜினி, லோகேஷ் கனகராஜ்  கூட்டணியில் உருவாகும் படம் தான் 'தலைவர் 171'.

நடிகர் கமலை வைத்து 'விக்ரம்' என்ற பிரம்மாண்ட ஹிட் படத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜ், ரஜினியை வைத்து இயக்குவது ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.

'தலைவர் 170 வது' படத்திற்கு வேட்டையன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், இதில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என்று ரஜினியின் ரசிகர்கள் நம்பிக்கை வெளியிட்டு வருகிறார்கள்.


மேலும், இதில் காவல்துறை சிஸ்டத்துக்குள்ளே இருந்து கொண்டு காவல் துறையால் நிகழ்த்தப்படும் போலி என்கவுண்டர்களுக்கு எதிராக ரஜினிகாந்த் களமாடும் படி கதைக்களத்தை ஞானவேல் அமைத்திருப்பதாக தகவல் வெளியானது.

இதை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் தற்காலிகமாக 'தலைவர் 171' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் எதிர்வரும் ஜூன் மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தின் போஸ்டர் நேற்று திடீரென வெளியிடப்பட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து இருந்தது.


இவ்வாறு வெளியான போஸ்டரில் ரஜினி மிகவும் இளமையாக தெரிவதோடு அவரது கைகளில் தங்க கடிகாரங்களிலான விலங்கு ஒன்றும், அவருக்குப் பின்னால் சுவர் கடிகாரம் ஒன்றும் காணப்படுகிறது.

இந்த நிலையில், தலைவர் 171 வது படத்தின் போஸ்டரில் ரஜினிகாந்த் கையில் வாட்ச் செயினை அணிந்திருப்பதன் பின்னணியில், அவர் வாட்ச் மெக்கானிக்காக வேலை செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


அதேபோல இந்த படத்திலும் ரஜினி நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, சூர்யா நடிப்பில் வெளியான 24 படத்திலும் சூர்யா   வாட்ச் மெக்கானிக்காக  நடித்து உள்ளமையும் குறிப்பிட்டத்தக்கது.


Advertisement

Advertisement