• Jan 18 2025

ஒரு வருட படப்பிடிப்பில் ஒரு மணி நேர படம் தான் முடிந்துள்ளதா? ‘விடாமுயற்சி’ இயக்குனர் மீது அதிருப்தி..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

அஜித் நடித்த வரும்விடாமுயற்சிபடத்தின் அறிவிப்பு கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான நிலையில் படப்பிடிப்பை தொடங்க நீண்ட காலமானது என்றும் படப்பிடிப்பு தொடங்கிய பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆமை வேகத்தில் தான் நடந்து வருகிறது என்றும் கூறப்பட்டு வருகிறது.

அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது தினமும் லட்சக்கணக்கான ரூபாய் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து செலவு செய்த போதிலும் ஒரு சில காட்சிகள் மட்டும் எடுக்கப்பட்டதாகவும் தட்பவெப்ப நிலை உள்ளிட்ட ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு மெதுவாக சென்றதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் படப்பிடிப்பு ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் ஆகி உள்ள நிலையில் இதுவரை எடுத்த காட்சிகளை எடிட் செய்து பார்த்தபோது வெறும் ஒரு மணி நேர படம் தான் முடிந்துள்ளது என்றும் 50 சதவீதம் கூட  படப்பிடிப்பு முடியவில்லை என்பதால் தயாரிப்பு நிறுவனமான லைகா கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.



இந்த நிலையில் இதுவரை அஜித்திடம் வாங்கிய கால்ஷீட் கிட்டத்தட்ட முடிவடைய இருக்கும் நிலையில் கூடுதலாக 50 நாட்கள் கால்ஷீட் கேட்டு இருப்பதாகவும் அதற்கு தயாரிப்பாளர் கூடுதலாக அஜித்துக்கு பணம் கொடுக்க வேண்டிய நிலை இருப்பதால் இயக்குனர் மீது கடும் கோபத்தில் லைகா இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல் சரியான திட்டமிடல் இல்லை என்பதால் த்ரிஷாவின் கால்ஷீட் வேஸ்ட்டானது என்றும் த்ரிஷா தரப்பிலிருந்து தற்போது கூடுதலாக கால்ஷீட் கொடுத்தாலும் அவர் கூடுதலாக பணம் கேட்கவில்லை என்பது மட்டும் ஒரு சிறிய ஆறுதலாக உள்ளது.

மொத்தத்தில்விடாமுயற்சிபடத்தின் படப்பிடிப்பு முடியவே இந்த ஆண்டு இறுதியாகிவிடும் என்றும் அடுத்த ஆண்டு தான் இந்த படம் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுவதால் அஜித் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Advertisement

Advertisement