• Jan 19 2025

வரலட்சுமியின் திருமணத்திற்கு 800 கோடி ரூபாய் செலவா? மூட்டை தூக்கி பிழைக்க போகும் சரத்குமார்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

நடிகை வரலட்சுமியின் திருமணம் தாய்லாந்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அவர்களது ரிஷப்ஷன் சென்னையில் லீலா பேலன்ஸ் ஹோட்டலில் ஆடம்பரமாக நடைபெற்றது.

இதில் முதலமைச்சர் உட்பட பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், தெலுங்கு சினிமாவின்  முன்னணி நடிகரான பாலகிருஷ்ணா, கன்னடத்தின் முன்னணி நடிகனான கிச்சா சுதீப் மற்றும் சித்தாத், ராதா ரவி, கௌதம் கார்த்திக், ரஜினி சார் என ஒட்டு மொத்த தென்னிந்திய பிரபலங்களும் இதில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள்.

இதைத்தொடர்ந்து நிக்கோலாய் தனது மனைவி வரலட்சுமிக்கு தங்கத்தில் செருப்பு, வைரத்தில் சேலை அது மட்டுமின்றி 200 கோடி ரூபாய்க்கு சொத்தும் எழுதி வைத்ததாக கூறப்பட்டது.


இந்த நிலையில், நடிகை வரலட்சுமியின் திருமணத்திற்கு 800 கோடி ரூபாய் செலவு செய்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தன.

இது தொடர்பில் சரத்குமார் கூறுகையில், வரலட்சுமியின்  திருமணத்திற்கு நான் 800 கோடி ரூபாய் செலவு செய்ததாக செய்தியை பரப்பி வருகின்றார்கள். அவ்வளவு பணம் எங்கே இருக்கின்றது என்று எனக்கே தெரியவில்லை. அப்படி பரவும் செய்தி முற்றிலும் பொய்யானது. எதுவுமே தெரியாமல் ஒரு தவறான தகவலை பரப்பி வருகின்றார்கள்.

இந்த வயசிலும் நான் திடமாக இருக்கின்றேன். அதற்கு காரணம் சுத்தமான பழக்க வழக்கங்கள் தான். நான் வீடு வீடாக பேப்பர் போட்டு வளர்ந்தவன். நான் உங்களால் வளர்க்கப்பட்டவன். இப்போது விட்டால் கூட நான் மூட்டை தூக்கி பிழைத்துக் கொள்வேன். இன்றைய இளைஞர்கள் கஞ்சா, குடி போன்றவற்றிற்கு அடிமையாக உள்ளார்கள் என கூறியுள்ளார் சரத்குமார்.

Advertisement

Advertisement