ஒரு காலத்தில் முன்னனி நகைச்சுவை நடிகராக இருந்த நடிகர் வடிவேலு சமீப காலங்களாக நினைத்த அளவு படவாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தார். மற்றும் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் மக்களால் கொண்டாடப்படாமல் சினிமாவில் சரிவை சம்பாதித்தார்.
இந்த நிலையில் தற்போது சுந்தர்.சி மற்றும் வடிவேலு கூட்டணியில் உருவாகியுள்ள ‘கேங்கர்ஸ்’ திரைப்படம் ஏப்ரல் 24-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் ‘மதகஜ ராஜா ’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கேங்கர்ஸ்’. மற்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
மேலும் நீண்ட கால இடைவெளியின் பின் இப்படத்தில் சுந்தர்.சி மற்றும் வடிவேலு காமெடி கூட்டணி இணைந்திருக்கிறது. இதனால் இந்த படத்துக்கு மாபெரும் எதிர்பார்ப்பு நிலவி இருக்கிறது. இதைவிட படத்தினை பார்வையிட்ட ஒரு சில பிரபலங்கள் படத்தில் வடிவேலுவின் காமெடி சூப்பராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதில் அவர் பல வேடங்களில் நடித்து அசத்தியுள்ளதாகவும் ஒரு காட்சியில் லேடி கெட்டப்பில் நடித்திருகின்றார்.
Listen News!