தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் குமார் ‘குட் பேட் அக்லி’ படத்தின் மூலம் திரையரங்குகளை அதிரவைக்க உள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு மற்றும் ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்தப் படம் ஏப்ரல் 10ம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தின் ரிலீஸுக்கு 24 நாட்களே உள்ள நிலையில், ரசிகர்களிடையே படத்திற்கான எதிர்பார்ப்பு உயர்ந்து கொண்டே வருகின்றது. சமீபத்தில் வெளியான ‘‘குட் பேட் அக்லி’ படத்தின் டீசர், தமிழ் சினிமாவின் அனைத்து சாதனைகளையும் முறியடித்து, 24 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களைப் பெற்ற டீசராக உருவெடுத்திருந்தது.
‘குட் பேட் அக்லி’ படம் ஒரு அதிரடி ஆக்சன் மற்றும் திரில்லர் என கூறப்படுகின்றது. இதில் அஜித்தின் மூன்று வேறுபட்ட பாகங்களைக் காணலாம் . குறிப்பாக அஜித் இதில் நல்லவன், தீயவன் மற்றும் மர்மமானவன் என்ற வகையில் காணப்படுகின்றார். அஜித்தின் அதிரடியான திருப்பங்களும் ஆக்சன் சீன்களும் படத்துக்கு பெரும் ஸ்டைலிஷ் லுக் கொடுத்துள்ளன. தற்பொழுது இப்படத்தின் "OG சம்பவம்" பாடல் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
Listen News!