இயக்குநர் பிருத்விராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் உருவாகியிருக்கும் 'எம்புரான்' திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் ஐமேக்ஸில் வெளியிடப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் மோகன்லால் நடித்து இருக்கும் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட திரைப்படமாகும். மேலும் இப் படம் ஐமேக்ஸில் வெளியாகும் முதல் மலையாளத் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்றும் லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. 'லூசிஃபர்' மோகன்லாலுக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்ததால் இதற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் மோகன்லால் தனது இன்ஸ்டா பதிவில் ஐமேக்ஸில் வெளியாவதற்கான தன்னுடைய உற்சாகத்தை பகிர்ந்துள்ளார். குறித்த பதிவில் "ஐமேக்ஸில் வெளியாகும் முதல் மலையாளப் படமாக 'எம்புரான்' இருப்பது மிகப்பெரிய கர்வத்தைக் கொடுக்கிறது. ஐமேக்ஸுக்கும் மலையாள சினிமாவுக்கும் உள்ள தொடர்பு இதன்மூலம் நீண்ட, சிறப்பு வாய்ந்த தொடர்பாக நீடிக்குமென நம்புகிறேன். இந்தப் படத்தை மார்ச் 27-ம் தேதி முதல் உலகம் முழுவதும் ஐமேக்ஸில் கண்டு களியுங்கள்." என கூறியுள்ளார்.
Listen News!