• Jan 19 2025

விஜய் டிவி ரசிகர்களுக்கு எதிர்பாராத ஏமாற்றம்.. முடிவுக்கு வந்த விஜய் டிவி சீரியல் இது தான்!

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

இந்திய தமிழ் தொலைக்காட்சிகளில் பொழுதுபோக்கு சேனல்களின் வரிசையில் எப்போதுமே முன்னிலையில் இருந்து வருவது விஜய் டிவி. 

இதில் ஒளிபரப்பாகும் அனைத்து வகையான நிகழ்ச்சிகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. அது சீரியலாக இருந்தாலும் சரி, ரியாலிட்டி ஷோவாக இருந்தாலும் சரி எளிதில் மக்களை கவர்ந்து விடுகின்றன.

இதில் ரியாலிட்டி ஷோக்களை பொறுத்தவரையில் எப்போதுமே சிரிப்பிற்குப் பஞ்சம் இருப்பதில்லை. கவலையாக இருக்கும் மக்களையும் கலகலப்பாக மாற்றும் திறமை குறித்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்களுக்கு உண்டு. 

அதேபோல தான் சீரியல்கள். இதில் நடிக்கும் பிரபலங்களை தமது வீட்டில் உள்ள ஒருவரைப் போலவே பார்க்கத் தொடங்கி விட்டார்கள் பார்வையாளர்கள்.


சீரியல்களை பொறுத்தவரையில் வெளிக்காட்டப்படும் சந்தோசம், துன்பம், கோபம், அழுகை கூட அப்படியே பார்வையாளர்களில் பிரதிபலிக்கின்றது. 

இந்த நிலையில், விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் ஒன்று முடிவுக்கு வரவுள்ளது.


அதாவது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் தற்போது முடிவுக்கு வர உள்ளதாம். மேலும், கோமாவில் இருக்கும் அர்ஜுன் தமிழ் குடும்பத்தை பற்றி உண்மைகளை தெரிந்ததும் இந்த சீரியல் முடிவுக்கு வந்துவிடும் என சொல்லப்படுகிறது.

இந்த சீரியல் முடிவடைந்த பின் இதற்கு பதிலாக நடிகர் திரவியம் நடிக்கும் 'வீட்டுக்கு வீடு வாசப்படி' என்ற சீரியல் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வர உள்ளது என கூறப்பட்ட நிலையில், தற்போது தமிழும் சரஸ்வதியும் சீரியல் முடிவுக்கு வந்துள்ளது என கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement