சமூக வலைத்தளங்களில் சமீபகாலமாக வைரலாகி வருபவர் வேடன் என்ற ஹிரண்டாஸ் முரளி இவர் தனது பாடல் வரிகள் மூலம் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்துள்ளார். இந்த நிலையில் பத்திரிகையாளர் உமாபதி நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போது வேடன் மீது எழுந்த பல சர்ச்சைகள் பற்றிக் கூறிய விடயங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
நேர்காணலில் தொகுப்பாளார் சில கேள்விகளை முன் வைத்துள்ளார். வேடன் மீது திட்டமிட்டு சில அடக்குமுறைகள் நடைபெறுகின்றன அதற்கு உங்களுடைய கருத்து என்னவாக இருக்கின்றது என்பதற்கு அவருடைய பதிலாக வேடன் தனாக முளைத்த ஒருவன். மிக பெரிய இன்டர்நேஷ்னால் லெவல்ல ரசிகர்களை கொண்டிருக்கும் "பெர்பியூம்" திரைப்படத்தினை உலகத்தில் உள்ள எல்லா டைரக்டரும் இந்த படத்தை பார்க்கமா இருக்க மாட்டாங்க, இந்த படத்தில் வரும் ஹீரோ மாதிரித்தான் வேடன் என்று கூறியிருந்தார்.
மேலும் கூறுகையில் எதிர்தரப்பினர்கள் நக்கி பிழைக்கும் கூட்டம், அரசியல் ரீதியாக தங்களுடைய தலைவர்களிடம் நல்ல மதிப்பிணை பெறுவதற்காக வேடனுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள் . வேடனை நான் வேறு ஜாதி, இனம் , மதம் என பார்க்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து வேடன் இந்த நாடு கிடையாது , தாய்மொழி தமிழ் ஆனால் மலையாளத்தில் பாடல் வரிகள், நம்மளுடைய ஊர் கிடையாது ஆனால் மக்கள் மனதில் நிலைத்து நின்று விட்டார் எனக் கூறியதுடன் வேடனுடைய பாடல் வரிகள் இந்த காலத்து இளைஞர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளதுடன் புரட்சிகரமனதாக அமைந்துள்ளது. இந்த பாடலில் பல உள்ளார்ந்த அர்த்தங்கள் காணப்படுகின்றன. அதாவது வேடன் சிறு வயது முதல் அடைந்த துன்பங்கள் தான் முக்கிய காரணங்களாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒருவர் மக்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்று வளர்ந்து வரும் போது தங்களை வளர்த்து கொள்வதற்காகவும் ஏனையவர்களிடம் நல்மதிப்பு பெறுவதற்காவும் ஒருவர் மீது சர்ச்சை வழக்குகளை பதிவு செய்யும் கூட்டம் தான் வேடன் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்கள் எனக்கூறினார். இதனைத்தொடர்ந்து வேடனுடைய வயது குறித்து எழுந்த கேள்விக்கு வயதிற்கும் ஞானத்திற்கும் சம்மந்தமே கிடையாது என்றும் துணிச்சலும் அசாத்திய திறமையும் தான் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
Listen News!