• May 30 2025

பெயர் சொல்லவே தைரியமில்லை... ஆனா திட்டுறாங்க..!– பாலாவை நக்கலாக விமர்சித்த நந்தவனம்!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா தற்போது நேர்மையான பேட்டிகளாலும், விமர்சனங்களாலும் உருக்குலைந்துள்ள தருணத்தில், இயக்குநர் நந்தவனம் சமீபத்தில் வழங்கிய நேர்காணல் திரைத்துறையின் உள்ளமைப்பையும், நேர்த்தியையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதுவரை வெளிவராத, சினிமா வட்டாரத்தில் பேசப்படும் சில தகவல்களைத் தைரியமாக பகிர்ந்துள்ளார் நந்தவனம். அதிலும், இயக்குநர் பாலா கூறியதாக பரவிய ஒரு அதிரடி சம்பவம் சினிமா ரசிகர்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.


அதன்போது நடுவர் ‘ஜின்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், இயக்குநர் பாலா கூறியதாக ஒரு சம்பவம் பேசப்பட்டது. அதாவது, "ஒரு பெரிய ஹீரோவுக்கு கதை சொன்னேன். ஆனால் அந்த ஹீரோ எனக்கு நடிக்க சம்மதிக்காது இழுத்தடிச்சார். மேலும் நீ இந்த சினிமாவை விட்டே போயிடு..!” என்று மிகக் கடுமையாக தட்டிக் கழித்ததாக செய்திகள் வெளியாகின. 

இதுகுறித்த உங்களது கருத்து என்னவென்று நந்தவனத்திடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நந்தவனம், “ஒரு ஹீரோவோட பெயரைத் தெரிவிக்காம, பொதுவாக சொல்லி, அவர் என்னை திட்டினார் என்று சொல்பவர்கள் அந்த தகவலைக் கதைக்கவே தகுதி இல்லாதவர்கள். அத்துடன் சிலர் அந்த நடிகர் SJ சூர்யா என்று கூறுகின்றனர். ஆனால் இதை இன்னும் பாலா சொல்லவில்லை." எனத் தெரிவித்திருந்தார்.  


இதன் மூலம், நந்தவனம் சினிமா உலகில் ஒருவரை குறிவைத்து தவறான தகவல்களை பரப்புவது குறித்த தனது மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் நேர்காணலின் போது நந்தவனம், “நான் ஒரு கதையை நடிகர் விமலுக்கு சொன்னேன். ஆனால் கதை நடுவிலேயே அவர் தூங்கிவிட்டார்." என்று சிரித்தபடி கூறியிருந்தார்.

அத்துடன், “இப்போதுள்ள ஹீரோக்கள் என்ன உணர்ச்சியில் இருக்கிறாங்களோ அதைப் படத்தில் நடிக்கிறாங்க. எல்லாரும் சைக்கோ மாதிரி தான் என்றதுடன் மாறுபட்ட, மன அழுத்தமுள்ள கதைகள் தான் இப்ப ஹீரோக்களுக்கு பிடிக்குது.” என்றும் கூறினார்.

Advertisement

Advertisement