திரைப்படங்கள் ஒரு நடிகரின் பங்களிப்பை மட்டுமல்ல, அவர்களது கலை மற்றும் உழைப்பை நெருக்கமாக உணர்த்தும் ஒரு செயலாக அமைகின்றன. அந்தவகையில், தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் நானி மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி இணைந்து நடித்துள்ள "ஹிட் 3" திரைப்படம், நாளை உலகம் முழுவதும் Netflix தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்த திரைப்படம் ஹிட் சீரிஸின் மூன்றாவது பாகமாக உருவாகியுள்ளது. இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரில்லர் படம், பிரம்மாண்டமான எதிர்பார்ப்புகளோடு வெளியாகவிருக்கிறது.
பொதுவாக நடிகைகள், கேமரா முன் தங்கள் காட்சிகளை வழங்குவது வழக்கமான விடயம். ஆனால், ஸ்ரீநிதி ஷெட்டி இந்த முறையில் ஒரு புதிய பரிமாணத்தைக் கொண்டுவந்துள்ளார். இன்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் ஒரு சிறிய வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அவர் இயக்குநரின் நாற்காலியில் அமர்ந்து, நானி நடித்த காட்சிக்கு “ஆக்சன்… கட்!” என சொல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.
Listen News!