• Aug 01 2025

டாப் குக்கு டூப் குக்கு ஷூட்டிங் என்ன ஆச்சு? பிரிட்டனில் சுற்றும் இயக்குனர்.. அம்மு எங்கே?

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் நான்கு சீசன்களை இயக்கிய இயக்குனர் பார்த்திவ் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் குக்கு டூப் குக்கு’ என்ற நிகழ்ச்சியை இயக்கி வருகிறார் என்பதும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி போலவே இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது தெரிந்ததே.

இந்நிலையில் இயக்குனர் பார்த்திவ் தனது சமூக வலைதளத்தில் பிரிட்டனுக்கு சுற்றுப்பயணம் செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு பல்வேறு கமெண்ட்ஸ்  பதிவாகி வருகிறது.

குறிப்பாக ‘நீங்கள் டைரக்டர் போல இல்லை, ஹீரோ மாதிரி இருக்கீங்க, பயணத்தை நன்றாக அனுபவியுங்கள்’ என்றும், டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சியை இயக்கும் பணியை விட்டுவிட்டு ஊர் சுற்றி கொண்டிருக்கிறீர்களா என்றும் கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

பார்த்திவ் மற்றும் நடிகை அம்மு அபிராமி ஆகிய இருவரும் காதலிப்பதாக கூறப்படும் நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பார்த்திவ் மற்றும் தனியாக பிரிட்டன் சென்று இருக்கிறாரா? அல்லது அம்முவும் சென்று இருக்கிறாரா என்பது தெரியவில்லை என்றாலும் விரைவில் இவர்களது காதல் மற்றும் திருமணம் குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement