• Jan 18 2025

அண்ணனுக்கு ஆன்லைனில் வாழ்த்து சொன்ன தம்பி, எதுனாலும் ஸ்பெஷல் தான் !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகுமாரின் மூத்த மகனான சூர்யாவின் திரைப்பயண ஆரம்பம் பெரிதும் வரவேற்கப்படாத போதிலும் இன்றைய நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் பட்டியலில் முன் வரிசை நடிகராக அறியப்படுகிறார். பெரும் ரசிகர் படையை சொந்தமாக கொண்ட இவரது படங்களுக்கான எதிர்பார்ப்பு பெரியதாக காணப்படுகிறது.

Pin page

"நேருக்கு நேரில்" அறிமுகமான சூர்யாவின் திரைப்பயணம் "நந்தாவில்" ஒரு திருப்பத்தை கண்டு "கஜனி" மூலம் தன்னை ஒரு பெரும் நடிகராகவே மாற்றிக்கொண்டார்."சூரரை போற்று" மற்றும்  "ஜெய்பீம்" படங்களில் யாரும் எதிர்பார மாறுபட்ட நடிப்பினை கொடுத்த சூர்யா தற்போது தன் ரசிகர்களுக்கென்றே "கங்குவா" என்ற பெரும் படைப்பை கொடுக்க தயாராகி வருகிறார்.

Films Gets A Cheeky Reply From Actor ...

இன்றைய நாளில் தனது பிறந்த நாளை கொண்டாடும் சூர்யாவிற்கு திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்தவாறுள்ளன.இந்நிலையில் நடிகர் சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் "பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கினாலும் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் எதையும் கற்று சாதிக்க முடியும் என்று எனக்குக் கற்றுத் தந்தவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் " என்ற கேப்ஷனுடன் அண்ணனுடன் தானிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.


Advertisement

Advertisement