• Jan 22 2026

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் பிரபலத்தின் தாயார் காலமானார்.! அதிர்ச்சியில் சின்னத்திரை

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

இயக்குநர் பாரதிராஜாவின் உறவினரான ஸ்டாலின், அவர் இயக்கிய  தெக்கத்திப் பொண்ணு என்ற சீரியல் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பின்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர், 7சி போன்ற சீரியல்களில் நடித்து  பிரபலமானார். 

இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த தொடர் என்றால் அது பாண்டியர் ஸ்டோர் தான். இந்த சீரியலின் முதல் பாகம் வெற்றிகரமாக முடிவு அடைந்ததை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகின்றது. 

தற்போது பரபரப்பான கதைக்களத்துடன் பாண்டியன் ஸ்டோர்  சீரியலின் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகின்றது. தங்க மயிலின்  பொய்யால் ஒட்டுமொத்த குடும்பமும்  சிறைக்குள் அடைப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். 


இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர் நடிகர் ஸ்டாலினின் தாயார் சகுந்தலா  முத்து நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். இவர் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக காணப்படுகின்றார்.

மேலும் அவருடைய இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு அவருடைய சொந்த ஊரான கே.எம் பட்டியலில் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.  தற்போது பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றன .


Advertisement

Advertisement