பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மிகவும் பரபரப்பான அதிரடி சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றன. இறுதியாக பிக்பாஸ் வீட்டில் இருந்த எட்டு போட்டியாளர்களுக்கு சவால் கொடுக்கும் விதத்தில் ஏற்கனவே வெளியேறிய எட்டு போட்டியாளர்களை மீண்டும் உள்ளே களமிறக்கி உள்ளனர். இந்நிலையில் சுவாரஷ்யமான திருப்பங்களுடன் முதல் ப்ரோமோ ரிலீசாகி இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் ஆரம்பிக்கப்பட்டபோது எந்த ஒரு ஆரவாரமும், சுவாரஸ்யமும் இல்லாமல் சென்றாலும் தற்போது பரபரப்பான கட்டத்தில் காணப்படுகின்றது. இந்நிலையில் வெளியான முதல் ப்ரோமோவில் "இந்த பிக்பாஸ் என்பது ஒரு பிரயாணம் வெளிய போனவங்க திரும்ப உள்ள வரும் போது தகுதியான நான் வெளிய போய்ட்டேன், அவங்க உள்ள இருக்காங்களே எப்படி என்று கேட்குறாங்க? என்று விஜய் சேதுபதி கூறினார்.
மேலும் "மீண்டும் இந்த வாய்ப்பு இவர்களுக்கு கிடைச்சு இருக்கு. உள்ள போன அவங்க மக்களுடைய கருத்து என்று சொல்லி தனிப்பட்ட வன்மத்தை போட்டியாளர்கள் மேல் திணிச்சு இருக்காங்க. இவ்வளவு தூரம் எல்லாம் தாக்கு பிடித்து வந்த நமது டாப் போட்டியாளர்கள் அவங்களுடைய ஆட்டத்தை எப்படி மெச்சூரிட்டியாக ஆடி இருக்காங்க. அவங்க மனநிலை எப்படி இருக்கு என்பதை பார்ப்போம்" என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
Listen News!