• May 09 2025

இந்தவாரம் குக்கு வித் கோமாளியில் சிரிப்பிற்கு பஞ்சமில்லை.! வெளியான புதிய புரொமோ.!!

subiththira / 6 hours ago

Advertisement

Listen News!

தமிழ் பாரம்பரியத்தை சிரிப்பு மற்றும் சுவையுடன் கலந்து கொண்டு மக்களுக்கு வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ அமைந்துள்ளது. அதன் 6வது சீசன், மக்கள் மத்தியில் அதிகளவான வரவேற்பைப் பெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில், இந்த வாரத்திற்கான புதிய புரொமோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.


பரபரப்பு, கலாட்டா, சுவை இம்மூன்றையும் ஒரே நேரத்தில் தரும் இந்நிகழ்ச்சி, தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு வார இறுதிகளில் ஒரு பண்டிகை மாதிரி உருவாகியுள்ளது. அந்தவகையில், சீசன் 6 இல் இந்த வாரம் ஒரு சிறப்பு விருந்து காத்திருக்கின்றது.

புரொமோவைப் பார்க்கும் போது கோமாளிகள் வித்தியாசமான வேடங்களில் தோன்றவுள்ளதனை அறியமுடிகிறது. ஒவ்வொருவரும், தங்களுக்கு ஏற்றவாறு வித்தியாசமான வேடங்களில் களமிறங்கி ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளனர்.


புரொமோவின் முக்கிய விசேஷம் என்னவென்றால், “90 நிமிடங்களில் சென்னை, கொங்கு நாடு, செட்டி நாடு போன்ற நாடுகளின் உணவை சமைக்க வேண்டும்” என நடுவர்கள் கூறியிருந்தனர். அதாவது, அந்த உணவுகளைத் தயார் செய்வது மட்டும் அல்லாமல், கோமாளிகளின் குழப்பத்தையும் சமாளித்து, அந்த உணவுகளை தயார் செய்வதே பெரிய சிரமமாக இருக்கும் என புரொமோ மூலம் தெரியவந்துள்ளது. 

Advertisement

Advertisement