• Jan 19 2025

இந்தியன் 2 டிக்கெட் பணத்தை திருப்பிக் கொடுத்த திரையரங்கு நிர்வாகம்! ஏன் தெரியுமா?

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் ரிலீஸ் ஆகி தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

உலக அளவில் இந்தியன் 2 படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்ட நிலையில், அதனை இந்த திரைப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்றே கூற வேண்டும். இந்தியன் 2 படம் தொடர்பில் கலவையான விமர்சனங்களை தற்போது வரையில் கிடைக்கப்பெற்று வருகின்றன.

இந்த நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் சீனியப்பா திரையரங்கில் இந்தியன் 2 திரைப்படம் திரையிடுவதற்கு தாமதமானதால் ரசிகர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்துள்ளார்கள். இதனால் அவர்களுடைய டிக்கெட் பணத்தை  திருப்பி கொடுத்து பிரச்சினையை முடித்துள்ளார்கள் தியேட்டர் உரிமையாளர்கள். தற்போது இந்த தகவல் வைரலாகி வருகின்றது .


அதாவது சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சீனியப்பா திரையரங்கில் இந்தியன் 2 திரைப்படம் திரையிட தாமதமானதோடு சில காட்சிகள் ஆடியோ வராததன் காரணத்தினால் ரசிகர்கள் கூச்சலிட்டு திரையரங்க உரிமையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்கள் .

இதனால் தியேட்டரில் இடம் பெற்ற தொழில்நுட்பக் கோளாறு சரி செய்ய முடியாமல் போகவே, ரகளையில் ஈடுபட்ட ரசிகர்களுக்கு டிக்கெட் பணத்தை திரையரங்கு நிர்வாகம் திருப்பி கொடுத்துள்ளது. 

Advertisement

Advertisement