• Jan 19 2025

தேவயானிக்கு ரூட்டு விட்டார்.. நக்மாவுடன் லிவிங் டுகெதர்..! சரத்குமார் பற்றி புட்டு புட்டு வைத்த பிரபலம்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களுள் ஒருவர் தான் சரத்குமார். இவர் 80, 90 ஆம் ஆண்டு காலங்களில் படு பேமஸான ஹீரோவாக வலம் வந்தார்.

தமிழ் சினிமாவில் தற்போதும் நடித்து வருவதோடு தனக்கேற்ற சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து,  குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகின்றார்.  சரத்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான போர், ஹிட் லிஸ்ட் போன்ற திரைப்படங்கள் மிகவும் நல்ல வரவேற்பு பெற்றன.

சமீபத்தில் தான் சரத்குமாரின் மகள் வரலட்சுமிக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. அதில் சரத்குமார் தனது மனைவி ராதிகாவுடன் மிகவும் என்ஜாய் பண்ணிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

இந்த நிலையில், நடிகர் சரத்குமார் பற்றி பிரபல சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் கிசுகிசு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதன்படி அவர் கூறுகையில், சரத்குமார் கொஞ்சம் பெண்கள் மீது ஆர்வமும் ஆசையும் கொண்டவர். ஆரம்பத்தில் தேவயானி வீடு தேடிப் போய் பொண்ணு கேட்டார். அதற்குப் பிறகு ஒரு ஹிந்தி நடிகையை காதலித்தார். பின்பு நக்மாவுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்தார். அவருக்கு நீலாங்கரையில் ஒரு பங்களாவும் வாங்கி கொடுத்தார். அவருடன் நடிக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு பிரம்மாண்ட படத்தையும் தயாரித்தார்.

ஆனால் அது போனியாகவில்லை. நடிப்பில் சம்பாதித்த அத்தனை பணத்தையும் நக்மாவிடம் இழந்தார். கல்யாணமான ஐந்தாம் வருடத்திலேயே சாயாதேவியை விவாகரத்து செய்தார். அதற்கு பிறகு தான் இறுதியில் நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டார் என தெரிவித்துள்ளார் பயில்வான்.

Advertisement

Advertisement