தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் பட்டிதொட்டியெங்கும் புகழ் பெற்ற நடிகராக வலம் வருபவர் கன்னட நடிகர் யாஷ். அதற்கு காரணம் கே.ஜி.எப் என்ற படம் தான்.
இந்த நிலையில், ஒரே ஒரு படத்தின் மூலம் உச்சம் தொட்ட நடிகர் யாஷின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பூவனஹல்லி என்கிற குக்கிராமத்தில் பிறந்தவர் தான் யாஷ். இவருடைய இயற்பெயர் நவீன் குமார் கவுடா. பின்னர் நாடகங்களில் நடிப்பதற்காக தன்னுடைய பெயரை யாஷ் என மாற்றிக்கொண்டார். பின்னர் அதுவே அவருக்கு அடையாளமாக மாறியது.
இதை தொடர்ந்து, நாடக கலைஞராக இருந்த யாஷுக்கு சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதை அடுத்து கன்னட சீரியல்களில் நடித்து வந்த யாஷ் கடந்த 2008-ம் ஆண்டு சினிமாவுக்குள் நுழைந்தார்.
இவரின் முதல் திரைப்படம் ராக்கி. எனினும், அப்படம் தோல்வி அடைந்ததை அடுத்து பிற மொழி படங்களை ரீமேக் செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டினார் யாஷ்.
அந்த வகையில் தமிழில் வெளியான 'களவாணி' படத்தினை கன்னட ரீமேக்கில் நடித்த யாஷ்க்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.
அதன்படி, வெற்றி, தோல்வி என சென்றுகொண்டிருந்த யாஷின் சினிமா கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது கே.ஜி.எப் படம் தான். இப்படம் பான் இந்தியா அளவில் மாஸ் ஹிட் அடித்தது.
இதன் இரண்டாம் பாகமும் வேற லெவலில் கிட் அடித்தது. அத்துடன், தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தையே ஓரம்கட்டியது யாஷின் கே.ஜி.எப் படம்.
இவ்வாறு, கே.ஜி.எப் எனும் ஒற்றை படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற நடிகர் யாஷின் சொத்து மதிப்பு ரூ.53 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இவர் கே.ஜி.எப் படம் வெற்றியடைந்ததும் பெங்களூருவில் ரூ.4 கோடிக்கு சொகுசு பங்களா ஒன்றையும் சொந்தமாக வாங்கி இருந்தார். அதுமட்டுமின்றி இவரிடம் ஆடி, ரேஞ்ச் ரோவர், பென்ஸ் என ஏராளமான சொகுசு கார்களும் உள்ளன.
இதேவேளை, அடுத்ததாக ராமயணத்தை மையமாக வைத்து உருவாகும் படத்தில் யாஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!