• Feb 23 2025

பெற்ற அம்மாவையே மோசமாக பார்க்கும் விஷமி அவன்! பிரபல நடிகரை விளாசிய பாவனா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக காணப்பட்ட நடிகை பாவனா 'சித்திரம் பேசுதடி' படத்தின் மூலம்  சினிமாவுக்கு அறிமுகமானர்.

இதை தொடர்ந்து தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். 


இதனிடையே கடந்த 2017ம் ஆண்டு ஷூட்டிங் முடித்துவிட்டு வீடு திரும்பும் போது திடீரென முகம் தெரியாத நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார்.

பின்னர் இதன் பின்னணியில் இருப்பவர் நடிகர் திலீப் தான் என்று பாவனா கூறியதன் அடிப்படையில் போலீசார் நடிகர் திலீப்பை தீவிரமாக விசாரித்தார்கள். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


எனினும், பல வருடங்களின் பின் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார். 

இந்நிலையில், நடிகர் திலீப் தற்போது தமன்னாவுடன் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இதையறிந்த பாவனா சமீபத்திய பேட்டி ஒன்றில் திலீப் குறித்து பேசும் போது, ' திலீப் பெற்ற அம்மாவையே மோசமாக பார்க்கும் விஷமி. அதனால் தான் அவர் என்னிடம் அப்படி நடந்துகொண்டார்'' என பாவனா வெறுப்பை கக்கியுள்ளார்.

Advertisement

Advertisement