• Dec 07 2024

அமரன் படம் ஓடிய திரையரங்கிற்கு குண்டு வீச்சு..! பரபரப்பு சம்பவம்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உச்சநிலையை அடைந்துள்ளார் சிவகார்த்திகேயன். இவர் இறுதியாக நடித்த அமரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஒளிபரப்பாகி வருகின்றது.

அமரன் திரைப்படம் வெளியான முதல் நாளையே 43 கோடிகளை வசூலித்தது. தற்போது இந்த படம் 250 கோடிகளை வெறும் இரண்டு வாரங்களில் வசூலித்துள்ள நிலையில், கூடிய விரைவிலேயே 300 கோடியை வாரி குவிக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

d_i_a

சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் கடந்த 14ஆம் தேதி வெளியான போது அந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இதன் காரணத்தினால் அமரன் படம் தொடர்ந்து திரையரங்குகளில் ஒளிபரப்பாக நல்ல வாய்ப்பாக காணப்படுகின்றது.


அமரன் படத்திற்கு பிறகு ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகின்றார். அதன் பின்பு சுதா கொங்கார இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடிப்பதற்கும் சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில், நெல்லை மேலப்பாளையம் பகுதியில் அமரன் திரைப்படம் ஓடும் திரையரங்கின் முன் பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு இடம் பெற்றுள்ளது. இதை தொடர்ந்து அங்கு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சிசிடிவி காட்சியை கைப்பற்றிய மேலப்பாளையம் போலீசார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றார்கள்.

ஏற்கனவே அமரன் படம் ஓடும் திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் மேலப்பாளையம் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு இடம்பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement