• Jan 19 2025

இளம் நடிகை எடுத்த விபரீத முடிவு.. புதிரான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்! அதிர்ச்சியில் திரையுலகினர்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

ஹிந்தி, போஜ்புரி உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அம்ரிதா பாண்டே.  இவர் படங்களில் மட்டும் இல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், வெப் சீரியல்களும் நடித்துள்ளார்.

2022-ல் மும்பையை சேர்ந்த சந்திரமணி என்பவரை திருமணம் செய்த இவர், மும்பையில் வசித்து வந்துள்ளார். அண்மையில் தனது சகோதரியின் திருமணத்திற்கு கணவருடன் அங்கு சென்றுள்ளார்.

இவ்வாறு தனது சகோதரியின் திருமணத்தை முன்னிட்டு திருமணம் முடிந்த சில நாட்களும் அங்கே தங்கி இருந்த அமிர்தா, தனது திரையுலக வாழ்க்கை பற்றி மிகுந்த கவலை உடனும் மன அழுத்தத்திலும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக அவர் சிகிச்சையும் எடுத்துள்ளாராம்.

இந்த நிலையில், சகோதரியின் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அவர் விபரீத முடிவை எடுத்துக் கொண்டுள்ளார். நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் அவரது சகோதரி கதவை உடைத்துப் பார்த்தபோது அவர் உயிரை மாய்த்து கொண்ட விஷயம் தெரிய வந்துள்ளது.


இதை அடுத்து அமிர்தாவின் சகோதரி கத்தி அலற அந்த சத்ததை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்துள்ளதோடு, போலீசாருக்கும் தகவல் வழங்கியுள்ளார்கள். அதன் பின் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.

இந்த சம்பவத்தை விசாரித்த பொழுது, அவர் இறப்பதற்கு சில மணி நேர முன்பு தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்துள்ளார் என தெரியவந்துள்ளது.

அதில், 'இரண்டு படகுகளில் வாழ்க்கை இருக்கிறது. அப்படி ஏன் சவாரி செய்ய வேண்டும். அதனால் அந்த படகை மூழ்கடித்து என்னுடைய பாதையை எளிதாக்கி கொண்டேன்' என்று அவர் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.

தற்பொழுது அமிர்தா பாண்டியின் மறைவிற்கு பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கள் தெரிவித்து வருவதோடு, இவரின் மறைவு சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement