• Nov 23 2025

திரையரங்கை அசத்திய “காந்தாரா சாப்டர்-1”.. தற்போது ஓடிடியில்.. வெளீயிட்டுத் தேதி அறிவிப்பு!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்துள்ள “காந்தாரா சாப்டர்-1” படம், அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. வெளியான தினத்திலிருந்தே வசூல் சாதனைகளைப் புதுப்பித்து வரும் இந்த படம், தற்போது OTT தளத்திலும் வெளியாகவிருக்கிறது. அதிகாரபூர்வ தகவலின் படி, அக்டோபர் 31ஆம் தேதி Prime Video தளத்தில் இந்த படம் வெளியாகவுள்ளது.


2022-ஆம் ஆண்டு வெளிவந்த காந்தாரா படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதன் முன்னோடி கதை (prequel) என உருவாக்கப்பட்டுள்ள காந்தாரா சாப்டர்-1, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ரிஷப் ஷெட்டி மீண்டும் இயக்கியதுடன், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். அவருடன் நடிகை ருக்மணியும் நடித்துள்ளார்.


முன்னைய படத்தில் காணப்பட்ட மரபு, பக்தி, தெய்வ சக்தி ஆகியவை இந்தப் படத்திலும் மேலும் ஆழமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சினிமா விமர்சகர்கள் குறிப்பிடுவதாவது, “காந்தாரா சாப்டர்-1 ஒரு திரைப்பட அனுபவம் மட்டுமல்ல; அது ஒரு ஆன்மீகப் பயணம்” எனவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement