• Oct 29 2025

ஜனனியின் லேட்டஸ்ட் லுக் பார்த்தீங்களா.? வேற லெவல் போஸ்.!! இன்ஸ்டாவில் வைரலான போட்டோ.!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை ஜனனி, தற்போது சமூக ஊடகங்களில் அதிகளவில் இடம்பிடித்து வருகிறார். விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் சிறிய ரோலில் நடித்த பின்னர், அவர் தனது நடிப்பில் வித்தியாசமான மாற்றங்களை கொண்டு வந்தார்.


அதன் பிறகு உசுரே படத்தில் ஹீரோயின் கதாப்பாத்திரத்தில் நடித்த ஜனனி, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்களால் மீண்டும் இணையத்தில் வைரலாகிறார்.


நடிகை ஜனனி சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்களில், கறுப்பு மற்றும் வெள்ளை நிறம் கலந்த பாரம்பரிய இந்திய சாறியில் காட்சியளித்துள்ளார். அவரது அழகும், ஸ்டைலும் ரசிகர்களின் பார்வையை கண்கொள்ள செய்யும் விதமாக இருந்தது.


ஜனனி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டார். அந்த நிகழ்ச்சி அவரது தனித்துவமான நடிப்பையும், நேர்மையான உணர்வையும் வெளிப்படுத்தியது.

அந்த நிகழ்ச்சியால் அவர் ரசிகர்களிடையே ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கினார். பிக்பாஸ் ரசிகர்கள், அவரது தைரியம் மற்றும் உணர்ச்சி வெளிப்பாட்டை இன்னும் ரசித்து வருகின்றனர். வைரலான போட்டோஸ் இதோ.! 

Advertisement

Advertisement