தமிழக வெற்றி கழகத் தலைவர் மற்றும் நடிகர் விஜய், சமீபத்தில் கட்சியின் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை நேற்று சென்னையில் உள்ள மாமல்லபுரத்திற்கு அழைத்து இன்று விஜய் அவர்களை சந்திப்பார் எனத் தகவல்கள் வெளியாகின.

கடந்த மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் கூட்டம், அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், கூட்டத்தின் முடிவில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மட்டுமல்லாமல், அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்வலை எழுந்தது. தன்னுடைய கட்சியின் நிகழ்வில் இப்படியான துயரச் சம்பவம் ஏற்பட்டது விஜயை ஆழ்ந்த வருத்தத்திற்குள்ளாக்கியது.

சம்பவத்துக்கு பின், தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் உடனடியாக விஜய் அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என்ற முடிவை எடுத்தார். அதன்படி, நேற்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அனைவரையும் சென்னைக்கு வருமாறு கட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்தது. மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் இடத்தில் விஜயை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு இன்று அவர் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் குடும்பத்தினரை சந்தித்த விஜய், அவர்களிடம் பேசும் போது தன்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருந்தார். “சென்னை அழைத்து வந்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள். நிச்சயம் கரூரில் வந்து சந்திப்பேன். வாழ்நாள் வரை நான் உங்களுடன் இருப்பேன். குடும்பத்தில் ஒருவனாக உங்களுடன் இருப்பேன்,” என கண்ணீர் மல்க விஜய் தற்பொழுது உறுதியளித்துள்ளார்.
அத்துடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எதிர்காலத்திற்கான முழுப்பொறுப்பையும் ஏற்கவுள்ளதாக அவர் உறுதியளித்தார். “உங்களுக்கு தேவையான உதவிகளை நான் செய்து தருவேன். வேலைவாய்ப்பு, திருமணம், கல்வி என அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்,” என்று கூறிய விஜயின் வார்த்தைகள் அந்த இடத்தில் இருந்த அனைவரின் மனத்தையும் நெகிழச்செய்தன.
Listen News!