• Nov 13 2025

சிறகடிக்க ஆசை சீரியல் மனோஜிக்கு அடித்த அதிஷ்டம்.! வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்  சிறகடிக்க ஆசை சீரியலில்  மனோஜ் கேரக்டரில் நடிப்பவர் ஸ்ரீ தேவா. இவர் தற்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார். ஏற்கனவே இவர் ஒரு சில படங்களில்  சின்ன சின்ன கேரக்டரில் நடித்துள்ளார். 

யாழ் மீடியா கிராஃப்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் "OTP"  படத்தில் ஸ்ரீ தேவா  கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை  பாருக் அப்துல்லா இயக்கியுள்ளார். 

இந்த படத்தில்  பவித்ரா, வெங்கட்ராமன், சத்யா மருதாணி, கேபியு ராஜ்குமார், கவிராஜ்,  எட்வர்ட் கென்னடி, அரவிந்த் உள்ளிட்ட பலர்  நடித்துள்ளனர்.  


இந்தப்படம் ஒரு GenZ  தலைமுறைக்கான ரொமான்ஸ், காமெடி படமாக அமைந்துள்ளது. காதல், டிஜிட்டல் உலகத்தின் ஆபத்தான இன்னொரு பக்கம் ஆகியவை கலந்த ஒரு சுவாரசிய கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தின் படப்பிடிப்புகள் திருச்சி, சென்னை, மும்பை மற்றும் மூணார் போன்ற பல இடங்களில் படமாக்கப்பட்டுள்ளன. இந்த படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளதாம்.  

இதற்கு சூர்யா ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார்.  இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்றைய தினம் வெளியானது.  விரைவில் டீசரும் trailerம் வெளியாக இருக்கின்றன. 

Advertisement

Advertisement