• Mar 15 2025

இடிக்கப்படும் உதயம் தியேட்டர்..! காரணம் என்ன..? சோகத்தில் ரசிகர்கள்..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

சென்னை அசோக் மில்லரின் அடையாளமாக கடந்த 40 ஆண்டு காலமாக இருந்து வரும் உதயம் தியேட்டர் மூடப்பட்டுள்ளது.இந்தியாவின் பிரபலமான தியேட்டர்களில் ஒன்றான இங்கு அஜித் ,விஜய் மற்றும் ரஜினி ,கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியானால் சொல்லவே தேவையில்லை இங்கு வீதியோரமெல்லாம் கூட்டம் திரண்டு திருவிழாக்கோலம் பெறும் 


அஜித்தின் ஒரு பாடல் கூட இத் தியேட்டரின் பெயரில் வெளிவந்து வைரலாகி இருந்தது அந்த அளவுக்கு பெயர் போன இந்த திரையரங்கம் தற்போது இடித்து தரைமட்டமாகி வருகின்றது.முதல் நாள் முதல் காட்சிகளுக்கு பெயர் போன திரையரங்குகளில் இதுவும் ஒன்று ott தளங்களின் வருகையின் பின்னர் அநேகமான திரையரங்குகள் மூடப்பட்டு வருகின்றது.


அந்த வரிசையில் தற்போது உதயம் தியேட்டரும் இடம்பிடித்துள்ளது.இந்த நிலையில் தற்போது பிரபல கட்டுமான நிறுவனம் ஒன்று 1.3 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த திரையரங்கினை விலைக்கு வாங்கியுள்ளதாகவும் விரைவில் அங்கு 25 கலங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பினை நிறுவுவதற்கான வேலைகளினை தொடங்கியுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

Advertisement