• Mar 14 2025

Boy or Girl..? வைரலாகும் கன்னிகா-சினேகன் இன்ஸ்டாகிராம் பதிவு ..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

திரைப்பட பாடலாசிரியரும் நடிகருமாகிய சிநேகன் அவர்கள் நடிகையும் ஓவிய கலைஞருமாகிய கன்னிகா அவர்களை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தைகள் இல்லாமல் இருந்த இந்த தம்பதியினருக்கு கடந்த ஆண்டு நல்ல செய்தி கிட்டியது.


தொடர்ந்து பல பதிவுகளை தமது சமூக வலைத்தளங்களில் போட்டு வரும் இவர்கள் தற்போது தமது வீட்டிற்கு தேவதைகள் வந்துள்ளதை மிகவும் அழகாக வரவேற்று தங்களுடைய ஸ்டைலில் இன்ஸ்டாகிராம் பதிவொன்றினை போட்டுள்ளனர்.


குறித்த வீடியோ பதிவில் "இறைவா நீ ஆணையிடு தாயே எந்தன் மகளாய் மாற "... என்ற எனது அன்பின் கோரிக்கை இரட்டிப்பாய் நிறைவேறியது... தாயே எந்தன் மகளாகவும் .. மகளே எந்தன் தாயாகவும் ...இரு தேவதைகள் 25.01.2025 அன்று பிறந்திருக்கிறார்கள் ..இதயமும்,மனமும் மகிழ்ச்சியில் நெகிழ்ந்து நிரம்பி வழிகிறது ...உங்களின் தூய அன்பினால் எங்கள் வாரிசுகளை வாழ்த்துங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement