• Jan 19 2025

அடுத்த 5 மாசமும் தியேட்டர்களில் அதிரடி சரவெடி தான்.. லிஸ்ட்டு ரொம்ப நீளுதே..!!

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியான படங்களில் ஒரு சில படங்கள் மட்டுமே ஹிட் அடித்தன. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும்  அரண்மனை 4, கருடன் மற்றும் மகாராஜா ஆகிய படங்கள் மட்டுமே  பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தன.

இதனால் நடப்பாண்டி முதல் பாதியில் பெரிய பட்ஜெட் மற்றும் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வராததன் காரணத்தினால் இரண்டாம் பாதியை எதிர்நோக்கி திரையரங்குகளும் சினிமா ரசிகர்களும் காத்துக் கொண்டு உள்ளனர்.

இந்த நிலையில், எதிர்வரும் 5 மாதங்களுக்கு பிரபல நடிகர்களின் படங்கள் போட்டி போட்டு ரிலீஸ் ஆகவுள்ளன. இதனால் ரசிகர்களுக்கு மிகுந்த கொண்டாட்டம் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

அதன்படி  தனுஷின் ராயன், ரஜினியின் வேட்டையன், விக்ரமின் தங்கலான், சூர்யாவின் கங்குவா சிவகார்த்திகேயனின் அமரன், பிரசாந்தின் அந்தகன், விஜய் நடிக்கும் கோட் திரைப்படம் மற்றும் அஜித்தின் விடாமுயற்சி உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement