• Jan 19 2025

காசு வாங்கிட்டு காட்டக்கூடாத எல்லாம் காட்டி தான் ரச்சிதா நடிச்சா..!! பகிர் கிளப்பிய பயில்வான்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார்.

இதை தொடர்ந்து பிரிவோம் சந்திப்போம், நாச்சியார் உள்ளிட்ட நாடகங்களில் நடித்துள்ளார். அதன் பின்பு நடிகரான தினேசை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் இவர்களின்  திருமணம் வாழ்க்கை கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் வரை சிறப்பாக சென்ற போதிலும், தற்போது விவாகரத்தில் முடிந்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றிய ரச்சிதா, அதற்குப் பிறகு பட வாய்ப்புகள் கிடைக்க கன்னடம், தமிழ் என கிடைத்த படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது அவர் ஜேஎஸ்கே சதீஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ஃபயர் என்ற படத்தில் நடித்துள்ளார். இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை ஒன்றில் இந்த படத்தின் தயாரிப்பாளர் ரச்சிதா பற்றிய விடயங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவேன் என மிரட்டி பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில், நடிகை ரச்சிதா மகாலட்சுமி சம்பளம் வாங்கிவிட்டு போய் செல்வதாக பிரபல சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஃபயர் படத்தில் ரச்சிதா படு மோசமாக நடித்துள்ளார்.  அவர் காட்ட கூடாத உடற் பாகங்களை எல்லாம் காட்டி நடித்துள்ளார். அந்தளவுக்கு மோசமாக கவர்ச்சியில் நடித்துள்ளார். அவ்வளவு மோசமாக இதுவரை எந்த நிகழ்ச்சியிலும் அவர் அப்படி பங்கு பற்றியது இல்லை.

ஆனால் இந்த படத்தின் கதை தெரிந்து, அதில் ஆபாச காட்சிகள் வரும் என்று தெரிந்தே தான் நடிகை ரச்சிதா நடித்தார். ஆனால் இப்போது தனது படத்தையே சிட் என்று கமெண்ட் செய்துள்ளார்.

தனது படத்தை அவர் சிட் என்றால் அவர்களைப் பற்றி என்ன நான் சொல்லுவது என்று படத் தயாரிப்பாளர் என்னிடம் கூறினார். மேலும் படத்திற்கு ரச்சிதா சம்பளம் வாங்கியதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் காட்டினார். ஆனால் தான் சம்பளம் வாங்கவில்லை என்று ரச்சிதா பொய் சொல்வதாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement