விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் பல தடைகளை தாண்டி கடந்த 19ஆம் திகதி கோலாகலமாக வெளியானது. இதை தொடர்ந்து அதற்கான வசூல் வேட்டையும் உச்சத்தை தொட்டுள்ளது.
இந்த நிலையில், ஜெயிலர் படத்தின் வசூலை விட லியோ படம் தனது வசூலில் சாதனை படைத்ததால் தான் சொன்ன படியே மீசையை எடுத்துள்ளார் மீசை ராஜேந்திரன்.
அதன்படி, லியோ படத்துக்கு எதிராக தொடந்தும் பேசி வந்த மீசை ராஜேந்திரன், லியோ ஒரு குப்பை படம், அது கண்டிப்பாக 300 கோடி கூட வசூலிக்காமல் தோல்வியடையும். ஒருவேளை லியோ படம் ஜெயிலர் படத்தின் வசூலை முந்தி விட்டால் தனது மீசையை எடுத்து விடுவதாக உச்சகட்டமாக சவால் விட்டிருந்தார்.
தற்போது ஜெயிலர் படத்தின் வசூலை லியோ முறையடித்துவிட்டதால் தான் கொடுத்த வாக்கை காப்பாற்றி விட்டேன் என மீசை இல்லாத முகத்துடன் இருக்கும் போட்டோவை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
எனினும், குறித்த 'போட்டோ எடிட் செய்யப்பட்டதாகவும்இ ஏமாற்றுவதை விட வேறு எதுவும் மீசை ராஜேந்திரனுக்கு தெரியாது. உண்மையான ஆம்பளையா இருந்தா மீசை எடுங்க..' எனவும் விஜய் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.
இதேவேளை, ஜெயிலர் படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை லியோ திரைப்படம் முந்தி விட்டதாக செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குடுத்த வாக்கை காப்பாற்றி விட்டேன் @actorvijay pic.twitter.com/Xvf9H5eBmF
— Meesai Rajendran (@MeesaiRajendra) October 31, 2023
Listen News!