• Oct 08 2024

'டாப் குக் டூப் குக்' வின்னருக்கு அடித்த ஜாக்பாட்.. விஜய் டிவி பிரியங்காவுக்கு வெறும் கப்பு மட்டும் தானா?

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் சமையல் நிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் சமையல் நிகழ்ச்சியில் ஒரு காமெடியை புகுத்தி கலாட்டா கலந்த சமையலாக 2019 ஆம் ஆண்டு விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றை அறிமுகம் செய்தது. அந்த நிகழ்ச்சி பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானதால் ரசிகர்களின் ஸ்பெஷல் நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி காணப்படுகின்றது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்களை  முடிவடைந்த நிலையில், அதில் முதலாவது சீசனில் வனிதா விஜயகுமார், இரண்டாவது சீசனில் கனி, மூன்றாவது சீசனில் ஸ்ருதிஹா, நான்காவது சீசனில் மைம் கோபி ஆகியோர் டைட்டில் வின்னர்களாக தேர்வு செய்யப்பட்டார்கள்.

இதை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை வெங்கடேஷ் இந்த சீசனில் இருந்து விலகி இருந்தார். அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக களமிறங்கினார். இதனிடையே தற்போது மணிமேகலைக்கும் பியங்காவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் குக் வித் கோமாளி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது.

இன்னொரு பக்கம் விஜய் டிவியில் இருந்து விலகிய வெங்கடேஷ் பட் சன் டிவியில் டாப் குக் டூப் குக் என்ற சமையல் நிகழ்ச்சியை ஆரம்பித்தார். இதில் ஜிபி முத்து, பரத், மோனிஷா போன்ற கோமாளிகளும் சன் டிவிக்கு தாவி அதில் பங்கேற்றனர். விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக டிஆர்பி யில் பட்டையை கிளப்பியது டாப் குக் டூப் குக் நிகழ்ச்சி.


இந்த நிலையில், குக் வித் கோமாளி சீசன் 5 மற்றும் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியின் முதலாவது சீசன் ஆகியவை ஒரே நாளிலேயே முடிவுக்கு வந்துள்ளன. இதில் இரண்டு நிகழ்ச்சிகளிலுமே பைனலில் ஆறு போட்டியாளர்கள் போட்டி போட்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்கா டைட்டில் வின்னர் ஆக வெற்றி பெற்றார்.

ஆனால் சன் டிவியில் ஒளிபரப்பான டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியில் திடீர் டுவிஸ்டாக இரண்டு பேர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டார்கள். அதன்படி நாகேந்திர பிரசாத் மற்றும் சுஜாதா ஆகியோர் டைட்டில் வின்னர் ஆக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு வெற்றி கின்னத்துடன் 20 லட்சம் ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்பட்டது.

ஆனால் விஜய் டிவியில் வெறும் 5 லட்சம் மட்டுமே வெற்றி பெற்ற பிரியங்காவுக்கு வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தை பிடித்த சுஜிதாவுக்கு ஒரு லட்சமும், சிறந்த கோமாளியாக தேர்ந்தெடுக்கப்பட்ட குரேஷிக்கு ஒரு லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement