• Jan 19 2025

தளபதி 68 படத்தின் பர்ஸ்ட் லுக் சற்றுமுன் வெளியானது! வெறித்தனமான கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் லியோ படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய 68வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரபுதேவா, மோகன், ஜெயராம், பிரசாந்த், சினேகா, லைலா, மீனாக்‌ஷி சவுத்ரி மற்றும் வெங்கட் பிரபு டீம் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை, தாய்லாந்து, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், அடுத்து இலங்கைக்கு படக்குழுவினர் செல்ல உள்ளனர். 


இந்த நிலையில், தளபதி 68 படத்திற்கான பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. 

அதன்படி, 'GOAT - The Greatest Of All Time' என இந்த படத்திற்கு பெயர் சூட்டி உள்ள நிலையில், அதில் இரட்டை வேடமாக காணப்படும் விஜய் ஒன்றில் தாடி வைத்திருப்பவராகவும் மற்றோரு ரோலில் கிளீன் ஷேவ் லுக்கிலும் காணப்படுகிறார்.

தற்போது, விஜய் ரசிகர்கள் இந்த அறிவிப்பை வெறித்தனமாக கொண்டாடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement