• Jan 19 2025

விஜயகாந்தை தொடர்ந்து பிரபல சீரியல் நடிகர் திடீர் மரணம்! பேரதிர்ச்சியில் சின்னத்திரை

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த சில வருடங்களுக்கு முன் பள்ளி மாணவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் சீரியலான 'கனா காணும் காலங்கள்' என்ற தொடரில் நடித்த பிரபல நடிகர் திடீரென உயிரிழந்துள்ளார்.

அதன்படி, கனா காணும் காலங்கள் முதல் சீசனில் PT வாத்தியாராக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான அன்பு என்கிற அன்பழகன் திடீரென உயிரிழந்துள்ளார்.


இந்திய தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான தாயுமானவன், சரவணன் மீனாட்சி, ரெட்டை வால் குருவி போன்ற தொடர்களில் நடித்த அன்பு, தற்போது அண்ணா மற்றும் சீதா ராமன் சீரியல்களிலும் நடித்து வந்தார். 

இவ்வாறான நிலையிலேயே, அவர் திடீரென உயிரிழந்துள்ளார். அவரது மரணம் சின்னத்திரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

இதேவேளை, தற்போது விஜயகாந்தின் மரணத்தில் இருந்தே மீள முடியாமல் உள்ள தமிழ்த் திரையுலகினருக்கு இவரது மரணம் மேலும் துன்பத்தைக் கொடுத்துள்ளது.



Advertisement

Advertisement