• Jun 26 2024

டாப் குக் டூப் குப் ஷோவில் முதல் எலிமினேஷன்.. அழுது புலம்பி வெளியேறிய நடிகை?

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி தான் டாப் குக் டூப் குப். இந்த ஷோவுக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

விஜய் டிவியில் இதுவரை குக் வித் கோமாளிக்கு நடுவராக இருந்த வெங்கடேஷ் பட், சன் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட டாப் குக் டூப் குப் நிகழ்ச்சிக்கு நடுவராக சென்றிருந்தார். இதனால் வெங்கடேஷ் பட்டின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தார்கள்.

தற்போது டாப் குக் டூப் குப் நிகழ்ச்சியில்சுஜிதா, சோனியா அகர்வால், பெப்சி விஜயன், சிங்கம்புலி போன்ற பல போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளார்கள்.


இந்த நிலையில், டாப் குக் டூப் குப் நிகழ்ச்சி ஐந்து வாரங்களை கடந்திருக்கும் நிலையில், முதலாவது எலிமினேஷன் நடைபெற்றுள்ளது.

அதில் போட்டியாளர்களுக்கு தண்ணீர், எண்ணெய் இல்லாமல் சமைக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் சிறப்பாக சமைக்கவில்லை என சொல்லி நடிகை சோனியா அகர்வால் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து சோனியா அகர்வால் எலிமினேட் ஆகி கண்ணீருடன் எல்லோரிடமும் விடை பெற்று சென்ற காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement