தெலுங்கு சினிமாவின் நாயகனான விஜய் தேவரகொண்டா தற்போது நடித்து வருகின்ற படம் தான் ‘கிங்டம்’. ஆக்ஷன் கலந்த திரைப்படமாக உருவாகும் இப்படம், அனிருத் இசையுடன் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இப்படம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘கிங்டம்’ படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘கிங்டம்’ படம் ஒரு பிரமாண்டமான ஆக்ஷன் கலந்த திரைப்படமாக உருவாகி வருவதுடன் படத்தின் கதைக்களம் ஒரு புராண கதையை மையமாக கொண்டது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இப்படத்தில் மரணத்தை வெல்லும் போராளியின் பயணத்தை படமாக்கியிருக்கின்றார்கள் என கோலிவூட் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளன.
‘கிங்டம்’ படத்தின் முதல் பாகம் மே 30ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கான டீசர் மற்றும் பாடல் என்பன ஏற்கனவே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் ‘கிங்டம்’ படத்தினை தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
Listen News!