• Mar 23 2025

“அப்பா இறந்தபோது கைதட்டிச் சிரித்தார்கள்…!” – மேடையில் எமோஷனலான பிரித்விராஜ்!

subiththira / 16 hours ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ் சுகுமாரன். சினிமா உலகில் நடிப்பு மற்றும் இயக்கத்தால் தனக்கென தனித்த அடையாளத்தைக் கொண்ட பிரித்விராஜ் , சமீபத்தில் நடைபெற்ற நேர்காணலில் தனது தந்தையான நடிகர் சுகுமாரன் இறந்த நிகழ்வைப் பற்றிக் கதைத்தது பலரின் மனதையும் தொட்டுள்ளது.


பிரித்விராஜ் அதில் கூறும்போது, “என் அப்பா சுகுமாரன் இறந்த நாளில், மோகன் லால், மம்முட்டி போன்ற பெரியவர்கள் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அவர்களைப் பார்த்த சிலர் சத்தமாகக் கத்தி உற்சாகமாகக் கை தட்டினார்கள். அவர்கள் வந்ததைப் பார்த்து சந்தோஷப்பட்டார்கள். ஆனால் என் வீட்டில் நடந்தது ஒரு துக்க நிகழ்ச்சி என்பது அவர்களுக்கு தெரியவில்லை" என வருத்தமாகக் கூறியுள்ளார்.

பிரித்விராஜ் பேட்டியில் கூறிய படி, மோகன் லால் மற்றும் மம்முட்டி இருவரும் அவரது தந்தையின் இறப்புத் தகவலைக் கேட்டு நேரில் வந்து காணிக்கை செலுத்தியுள்ளனர். “அவர்கள் வந்தது நிச்சயமாக நெகிழ்ச்சியான விடயம். ஆனால், அவர்களைப் பார்த்து சிலர் நிகழ்ச்சிக்கு வந்தது போல கை தட்டி அழைத்தது " எனக்கு கவலையாக இருந்தது என்றார்.

Advertisement

Advertisement