• Jan 19 2025

படத்தோட முடிவு உங்க கையில தான் இருக்கு..! சற்றுமுன் எஸ்கே வெளியிட்ட வீடியோ

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக நடிகர் சூரி நடித்த கொட்டுக்காளி திரைப்படம் காணப்படுகிறது. இந்த படத்தை கூழாங்கல் படத்தை இயக்கிய வினோத் ராஜ் இயக்கியுள்ளார். இதனை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.

கொட்டுக்காளி  திரைப்படத்தில் ஒரு பாடல் கூட இல்லை. பின்னணி இசையும் இல்லையாம். அதற்கு காரணம் படத்தில் இசையமைப்பாளர் இல்லை. லைவ் சவுண்டு முறை இதில் பின்பற்றப்பட்டுள்ளது.

இந்தப் படத்தைப் பார்த்த உலக நாயகன் கமலஹாசன் கொட்டுக்காளி படக் குழுவை  நேரிலே அழைத்து பாராட்டி இருந்தார். மேலும் இந்த படத்தில் ஆணாதிக்கத்தின் குறியீடுகளாக சேவல், சீறும் காளை, பாண்டியன், பூசாரி என்ற பலர் இருந்தாலும் அவற்றை கதாநாயகி எதிர்கொள்ளும் விதம், மாறிவிட்டதை காலம் மற்ற பாத்திரங்கள் புரிந்துகொள்ளாவிடினும் பார்வையாளர்களாகிய ஆடியன்ஸ் ஆகிய நமக்கு படம் பிடித்து காட்டுகின்றது என பாராட்டியும் இருந்தார்.

இந்த நிலையில்,  தற்போது கொட்டுகாளி திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இதன் தயாரிப்பாளரும் நடிகருமான சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில் அவர் கூறுகையில், எல்லாருக்கும் வணக்கம்!!  இந்த திரை அனுபவம் உங்களுக்கு நிச்சயமாக புதுசா இருக்கும்.  இந்த கதை உங்களுக்கு பழக்கப்பட்ட கதையா இருந்தாலும் அதை சொல்ல வந்த விதம், இது சொல்லப்பட்ட திரை மொழி ரொம்ப ரொம்ப புதுசா இருக்கும். இது முழுக்க முழுக்க ஒரு முயற்சிதான். 

இத நீங்க தியேட்டர்ல பாருங்க இந்த படம் உங்க எல்லாருக்கும் எப்படிப்பட்ட அனுபவத்தை கொடுத்துச்சு என்பதை நீங்க சொல்லுங்க. அது மட்டும் இல்லாம வினோத் ராஜ் இந்த படத்தோட இயக்குனர் இந்த படத்தோட முடிவ உங்க கிட்ட விட்டிருக்கிறார். இந்த படத்தின் முடிவும் உங்க கையில தான் இருக்கு எனக் கூறியுள்ளார். 

Advertisement

Advertisement