தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் தான் ‘ஜனநாயகன்’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
வழக்கமான இசை வெளியீட்டு விழாவாக இல்லாமல், இந்த முறை ‘தளபதி கச்சேரி’ என்ற பெயரில் ஒரு முழுமையான கான்செர்ப்ட் வடிவில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவது ரசிகர்களிடையே கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவின் கோலாலம்பூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் இந்த நிகழ்ச்சி இடம்பெறுகின்றது. ஆயிரக்கணக்கான ரசிகர்களை ஒரே நேரத்தில் ஏற்றுக் கொள்ளும் திறன் கொண்ட இந்த மாபெரும் அரங்கம், இன்று முழுவதும் தளபதி விஜயின் ரசிகர்களால் நிரம்பியுள்ளது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள விஜய், பூஜா ஹெக்டே, இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினர் நேற்று மலேசியாவுக்கு சென்றனர். அவர்களின் வருகையை காண விமான நிலையத்திலேயே ரசிகர்கள் திரண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சி, விஜய் ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல், உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்களுக்கும் ஒரு திருவிழா அனுபவமாக அமைந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் “Thalapathy Festival” என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருவதும் இதற்கு சான்றாகும்.
இந்த பிரம்மாண்ட விழாவில் எதிர்பாராத ஒரு திருப்பமாக, புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. இதனால் நிகழ்ச்சி பாதிக்கப்படுமா என்ற கவலை எழுந்தாலும், ஏற்பாட்டாளர்கள் உடனடியாக செயல்பட்டு, விஐபி சீட்டில் அமர்ந்திருந்த ரசிகர்களுக்கு ரெயின் கோட் வழங்கினர்.

மழை பெய்தாலும், ரசிகர்களின் உற்சாகம் சற்றும் குறையவில்லை. மாறாக, அந்த மழை நிகழ்ச்சிக்கு இன்னொரு தனிச்சிறப்பை சேர்த்தது. மழை பெய்துக் கொண்டிருந்த அந்த சமயத்தில், விஜயின் குரலில் பாடப்பட்ட “மேகமாய் வந்து போகிறேன்” பாடல் ஒலித்தது. இந்த பாடல் டைமிங், ரசிகர்களை உணர்ச்சி வசப்படுத்தியது. இதற்கு ஏற்ற வகையில் ரசிகர்கள் VIBE செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!