விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சி, ஒவ்வொரு சீசனிலும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெறுகிறது. தற்போது, இந்த நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. தினமும் புதிய திருப்பங்களும், எதிர்பாராத மோதல்களும் நிகழ்ச்சியை இன்னும் சுவாரஸ்யமாக மாற்றி வருகின்றன.

இந்த சீசனில் யார் டைட்டில் வின்னர் ஆகப் போகிறார் என்பது இதுவரை கேள்விக்குறியாகவே உள்ளது. ஒவ்வொரு போட்டியாளரும் தங்களின் தனித்துவமான விளையாட்டு முறையால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள பிக் பாஸ் 9 ப்ரோமோ ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
வெளியான ப்ரோமோவில், விஜய் சேதுபதி, போட்டியாளர்களை நோக்கி ஒரு கேள்வியை எழுப்புகிறார். அதாவது,“வீட்டு ஆட்கள் எல்லாம் வந்தாங்க… எதையெல்லாம் நீங்க மாத்திக்கணும்னு நினைச்சீங்க? அவங்க அப்படி சொன்ன உடனே ஆளே மாறிட்டாங்க… என்று யாரை நினைக்கிறீங்க?” என்று கேட்டார்.

விஜய் சேதுபதி கேட்ட கேள்விக்கு முதலில் பதிலளித்தவர் கமருதீன். அவர் பேசும்போது, “பார்வதி தான். நான் இப்போவெல்லாம் பெண்மையா பீல் பண்ணுறேன் என்று சொல்லிட்டு, அவங்க அவங்களோட பாதையை தேடி போறாங்க. நானும் டாட்டா சொல்லி வழி அனுப்பிவிட்டுட்டேன்.”என்று கூறினார்.
கமருதீனின் கருத்துக்கு பதிலளித்த பார்வதி, “அவர் தான் மாஸ்… லவ்வர் பாய். நாங்க எல்லாம் தான் போய் அவர் கிட்ட விழுந்திட்டோம். அப்படி ஒரு போர்வைக்குள்ளேயே கமருதீன் இருக்கிறார்.” என்று தெரிவித்தார். இந்த வார்த்தைகள், ப்ரோமோவில் மிக முக்கியமான ஹைலைட்டாக மாறியுள்ளது. பார்வதியின் இந்த பதில், கமருதீனை கிண்டலடிக்கும் விதமாக அமைந்துள்ளது.
Listen News!